April 29, 2024

17 வருட ம் ஆ கியும் கமலு க்கு குறை யாத மவு சு ..!! ரீ ரிலீஸி ல் மாஸ் கா ட்டிய வே ட்டை யாடு விளை யா டு ..!! அடே ங் கப்பா , முத ல் நா ள் வசூ ல் இத்த னை கோ டி யா..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு . இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜோதிகா கமலினி  முகர்ஜி, பிரகாஷ்ராஜ் ,டேனியல் பாலாஜி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  அது மட்டுமல்லாமல் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.  இப்படி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து,

மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது . அந்த வகையில் நேற்று ரிலீசான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் நேற்று சுந்தர் சி யின் தலைநகரம் 2 ,விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு , சுனைனாவின் ரெஜினா போன்ற பல திரைப்படங்கள்,

வெளியாகி இருந்தது.  அந்த படத்தோடு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மட்டும் தான்  நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது . அந்த வகையில் இந்த படங்களை விட வேட்டையாடு விளையாடு தான் முதல் நாளில் வசூலை அள்ளியுள்ளதாம்.

அந்த வகையில் வேட்டையாடு விளையாடு படத்தின் முதல் வசூல் 2. 50 கோடி என்று கூறப்படுகிறது.  மேலும் கிட்டதட்ட 17 வருடங்கள் கழித்து வெளியாகியும் இந்த திரைப்படத்திற்கு மவுசு குறையாமல் இருப்பது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *