April 28, 2024

லியோ படம் சூப்பர் ஹிட்டாக வேண்டும்..!! முக்கிய கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற லோகேஷ் கனகராஜ் ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  இதுவரை நாலு திரைப்படங்கள் மட்டுமே லோகேஷ் கனகராஜ் எடுத்திருந்தாலும் 40 படம் எடுத்த புகழை சம்பாதித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் ஏற்கனவே விஜய்யுடன் மாஸ்டர் என்ற படத்தில் பணி புரிந்திருந்த லோகேஷ் தற்போது இரண்டாவது முறையாக ,

விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார் . அந்த வகையில் இவர்களுடைய கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது . இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத், திரிஷா ,அர்ஜுன் ,மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ,

சாண்டி மாஸ்டர் ,பிரியா ஆனந்த் ,மன்சூர் அலிகான் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட்டாக வேண்டும் என்று முக்கிய கோவிலுக்கு பாதயாத்திரை சென்று இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,

மற்றும் அவருடைய உதவி இயக்குனர்கள்.  அந்த வகையில் ஒரு படத்தை எடுத்து முடித்தவுடன் முக்கிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . அந்த வகையில் தற்போது வரை அந்த சென்டிமென்டை,

கடைபிடித்து வரும் லோகேஷ் தற்போது தன்னுடைய உதவி இயக்குனர்களுடன் திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்று இருக்கிறார்.  தற்போது அந்த வீடியோ இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *