April 29, 2024

நடி கை ராதாவு க்கு என் னாச்சு ..?? ஆளே அடை யா ளம் தெரி யாத அளவி ற்கு குண் டாகி விட்டா ரே ..?? வெ ளியா ன புகை ப்படத் தை பார்த் து ஷாக் கா ன ரசிக ர்க ள் ..!!

80 , 90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா . கடந்த 1981 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ராதா.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், ஆனந்த ராகம் ,கோபுரங்கள் சாய்வதில்லை, காதல் ஓவியம் ,துடிக்கும் கரங்கள், நான் மகான் அல்ல, ஒரு கைதியின் டைரி , முதல் மரியாதை, அம்மன் கோவில் கிழக்காலே , மெல்ல திறந்தது கதவு  போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகை ராதா .  மேலும் நடிகை ராதா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம்,  கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லாம் மொழி படங்களிலும் ,

கலக்கிக் கொண்டு வந்த ராதா கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  இதில்  நடிகை ராதாவின் இரண்டு மகள்களுமே  தமிழ் சினிமாவில் நடிகையாக உள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் 58 வயதான நடிகை ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் நடிகை ராதாவா இது .? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே  என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *