May 6, 2024

எம்மதமும் சம்மதமே ..!! கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாராகும் கெளதம் – மஞ்சிமா ஜோடி ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

கௌதம் கார்த்திக் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இளம் நடிகர் ஆவார் . மூத்த நடிகரான கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என்னமோ ஏதோ ,வை ராஜா வை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ,

இவன் தந்திரன்,  ரங்கூன் போன்ற திரைப்படங்கள் கௌதம் கார்த்திக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  இதனிடையே தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது சக நடிகையான மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார் நடிகர் கௌதம் கார்த்திக் . பின்னர் கடந்த வருடம் இருவரும்,

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . மேலும் திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் கௌதம் கார்த்திக்.  இப்படி இருக்கும் நிலையில்  கிறிஸ்மஸ் பண்டிகை விரைவில் வர இருப்பதால் இப்போதே ,

அதற்கான ஏற்பாடுகளை தன்னுடைய வீட்டில் செய்து வைத்துள்ளனர்  கௌதம் கார்த்திக் மற்றும் அவருடைய மனைவி.  இதைப் பார்த்த ரசிகர்கள் எம்மதமும் சம்மதமே என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *