April 29, 2024

ஒரு வழியா இரண்டாவது கல்யாணத்தை முடித்த அமலா பால் ..!! கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அமலா பால்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய அமலாபால் வீரசேகரன் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது மைனா ,தெய்வத்திருமகள், வேட்டை ,காதலில் சுதப்புவது எப்படி போன்ற ,

படங்களின் மூலம் தான் . குறிப்பாக நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே விஜய், சூர்யா ,விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார் நடிகை அமலா பால் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ,

இந்தி மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்  நடிகை அமலா பால்.  ஆனால் திருமணமான மூன்று வருடங்களிலேயே இருவரும்,

விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த  நடிகை அமலா பால் தற்போது தன்னுடைய இரண்டாவது கல்யாணத்தை கோலாகலமாக முடித்துள்ளார் . தன்னுடைய நண்பரையே கரம் பிடித்த அமலாபாலின் திருமண புகைப்படங்கள்,

தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அமலாபாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *