May 7, 2024

நட்புனா இப்படி இருக்கணும் ..!! உலகநாயகனை சந்தித்த சூப்பர் ஸ்டார் ..!! 21 வருடங்கள் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய ஜாம்பவான்களாக இருந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் . ஆரம்பத்தில் வெளியான அபூர்வராகங்கள் ,16 வயதினிலே ,அவள் அப்படித்தான் ,ஆடுபுலி ஆட்டம் ,மூன்று முடிச்சு ,இளமை ஊஞ்சலாடுகிறது ,நினைத்தாலே இனிக்கும் போன்ற பல திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்து அசத்தியிருந்தனர் ,

இதன்பிறகு தான் இருவரும் தங்களுக்குரிய பாணியில் கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தனர் . அப்படி ரஜினிக்கு ஸ்டைல் என்றால் கமலுக்கு திறமையான நடிப்பு . என்னதான் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜ  வாழ்க்கையில்,

இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் நட்புக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால் அது ரஜினி கமல் தான் . மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும்,  ஒரு சில நேரங்களில் எதிரி ஆகி விடுகிறார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ரஜினி , கமல் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் 21 வருடங்கள் கழித்து ஒரே ஸ்டூடியோவில் ரஜினியும் , கமலும் சந்தித்துள்ளனர்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் நட்புனா இப்படி இருக்கணும் என்று கூறிவருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்கள் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *