April 28, 2024

விஜய் க்கு அம் மாவா க கூட நடிப் பே ன் ..!! ஆ னால் , தங்கை யா க மட்டு ம் நடிக் க மாட் டேன்..!! கார ண த்தை சொல் லிய நடிகை வனி தா விஜ யகு மார் ..!! நடி ச்சா இ து தா ன் நட க்கு ம் ..!!

நடிகர் விஜய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . தற்போது  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கு அம்மாவாக கூட நடிப்பேன் ஆனால் தங்கையாக  மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ,

நடிகை வனிதா விஜயகுமார் . அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வனிதா விஜயகுமார்  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்  நடிகை வனிதா விஜயகுமார்  .  இருந்தாலும் ,

இவர் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் . இதை அடுத்து  பல வருடங்கள் கழித்து பழையபடி மீண்டும் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் வனிதா விஜயகுமார்  . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வனிதா  விஜயகுமார் ,

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்னை பெரிய அளவில் பிரபலமாக்கியது . அதன் மூலம் தான் கடந்த இரண்டு வருடங்களில் 17 படங்களில் நடித்திருந்தேன் . அந்தப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.  இந்த நேரத்தில் விஜய்க்கு தங்கையாக  நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டுள்ளனர் .

அதற்கு பதில் அளித்த வனிதா விஜயகுமார் , விஜய்க்கு என்னால் தங்கையாக நடிக்க முடியாது . அது சுத்தமாக செட்டாகாது.  அவருக்கு நான் அம்மாவாக கூட நடிப்பேன் , ஆனால் தங்கையாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை வனிதா  விஜயகுமார்  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *