April 29, 2024

லாஸ் லியா வை வம்பு க்கு இழுக் கும் கவி னின் மனை வி ..!! கல் யாண ம் ஆன தும் இப்ப டியா பதி வு போ ட்டார் ..?? தீயா ய் பர வும் பதி வு உ ள் ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கவின் . சீரியல் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகர் கவின் ஒரு சில படங்களில் சிறு சிறு  கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.  இதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் கவின் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான  லிப்ட் மற்றும் டாடா,

போன்ற திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதனால் கவினின் மார்க்கெட் உச்சத்திற்கே சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.  இதனிடையே பிக் பாஸில் கலந்து கொண்ட  நடிகர் கவின் சக போட்டியாளரான லாஸ்லியா மீது காதல் வயப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் .

ஆனால் இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் 33 வயதான நடிகர்  கவின்  கடந்த 20 ஆம் தேதி மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது . இப்படி இருக்கும் நிலையில்,

லாஸ்லியாவை வம்புக்கு இழுத்துள்ளார் கவினின் மனைவி . அந்த வகையில் கவினின் மனைவி சமூக வலைத்தளப் பக்கத்தில் , நான் கவினின் அதிகாரப்பூர்வ மனைவி ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.  இது லாஸ்லியாவை குறிப்பிட்டு தான் அவர் வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *