May 1, 2024

நானும் சுத்த தமிழன் தான்..!! என்னோட அப்பா இந்த ஊரு தான் ..!! ஓப்பனாக சொல்லிய அஜித் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார்.  ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அஜித்குமார் பின்னர் அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் அஜித் . தற்போது நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி,

இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார் . இதை முடித்த கையோடு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்.  மேலும் நடிகர் அஜித் தமிழர் கிடையாது அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று,

அப்போது பலரும் கூறி வந்தனர் . அதற்கெல்லாம் ஒரு பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஜித்.  அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டி ஒன்றில் அஜித் கூறியதாவது ,அஜித் குமார் என்ற பெயர் வடமாநிலத்தை சேர்ந்த பெயர் தான் . ஆனால் என்னுடைய தந்தை,

சென்னையைச் சேர்ந்த தமிழர் . நானும் ஒரு தமிழர் தான் . ஆனால் என்னுடைய தாய் தான் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறியிருந்தார்நடிகர் அஜித் .குறிப்பாக நடிகர் அஜித் நடிக்க வருவதற்கு முன்பு ஈரோட்டில் தான் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *