May 1, 2024

முதல்முறையாக தன்னுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட கவுண்டமணி ..!!

80, 90களில் ஒரு முக்கியமான காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்தவர் நடிகர் கவுண்டமணி . சர்வர் சுந்தரம் என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான கவுண்டமணி 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்தார் கவுண்டமணி . இன்னும் சொல்லப்போனால் இவரும் செந்திலும்,

இணைந்து நடித்த காமெடி காட்சிகள் காலம் கடந்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.  அந்த அளவிற்கு கவுண்டமணியும் , செந்திலும் இணைந்து நூறு படங்களுக்கு மேல் காமெடி நடிகர்களாக  நடித்திருந்தனர் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு,

விலகி இருந்த கவுண்டமணி 49 ஓ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . அதன் பிறகு மீண்டும் சினிமாவை விட்டு விலகிய கவுண்டமணி தற்போது ஒத்த ஓட்டு முத்தையா  என்ற படத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது . மேலும் நடிகர் கவுண்டமணி ,

இதுவரை அவருடைய குடும்பத்தை வெளியில் காட்டியதே கிடையாது . அந்த வகையில் கவுண்டமணிக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் முதல்முறையாக கவுண்டமணியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *