May 2, 2024

பிக்பாஸ் 7 ல் அதிக சம்பளம் வாங்கும் ஒரே போட்டியாளர் ..?? இவருக்கு மட்டும் அள்ளிக்கொடுத்த உலகநாயகன் ..!! வெளிவந்தது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விபரம் ..!!

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த சீசன் ஆரம்பித்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 7 . இப்படி இருக்கும் நிலையில் இந்த எபிசோடில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பள விபரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த சீசனிலேயே அதிக சம்பளம் வாங்கியது பிரபல எழுத்தாளரான பவா செல்லத்துரை தான் . இவருக்கு ஒரு எபிசோடுக்கு 28 ஆயிரம் சம்பளமாம் . இவரைத் தொடர்ந்து மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனுக்கு 27 ஆயிரம் சம்பளமும்,

கவர்ச்சி நடிகையான விசித்திராவுக்கு 27 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படுகிறதாம்.  இவர்களைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையான வினுஷா தேவி, சீரியல் நடிகரான விஷ்ணு , கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனிக்கு 20 ஆயிரம் சம்பளமும் ,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகரான சரவணன் விக்ரம் ,கூல் சுரேஷ் நடன கலைஞர் மணிச்சந்திரா , மௌன ராகம் 2  சீரியல் நடிகை ரவீனா போன்றவர்களுக்கு 18000 சம்பளமும்,  பூர்ணிமா,  விஜய் வர் மா போன்ற பிரபலங்களுக்கு 15 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படுகிறதாம்.

இந்த 18 போட்டியளர்களில் இருப்பதிலேயே குறைவான சம்பளம் வாங்குவது வனிதாவின் மகளும்,  அனன்யா ராவ் என்பவரும் தானாம் இவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு  13 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *