April 28, 2024

வெளிநாட்டு இசையை ஆட்டைய போட்டு மாட்டிய அனிருத் ..!! இவர்தான் இளையராஜாவும் , ரகுமானும் கலந்த கலவையா..?? காற்றில் பறக்கும் அனிருத்தின் மானம் ..!!

தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத்.  கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் அனிருத் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல்,  வேலையில்லா பட்டதாரி, கத்தி, நானும்ரௌடி தான் ,வேதாளம், தானா சேர்ந்த கூட்டம்  பேட்ட, மாஸ்டர் என்று ,

தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  குறிப்பாக சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் கண்டிப்பாக அனிருத் தான் இசையமைப்பாளர் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது .

இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டு இசையை ஆட்டைய போட்டு வசமாக மாட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் . அந்த வகையில் லியோ படத்தில் இடம் பெற்ற  “ordinary person” என்ற பாடல்  பிரபல வெளிநாட்டு இசையமைப்பாளரான ஓட்னிகா என்பவர் இசையமைத்த,

ஆல்பம் பாடலின் காப்பியாகும் . இதை கண்டுபிடித்த தமிழ் ரசிகர்கள் அந்த வெளிநாட்டு இசையமைப்பாளரான ஓட்னிகாவுக்கும் இதை ஷேர் செய்துள்ளனர் . இதைபார்த்து ஷாக்கான ஓட்னிகா யாரும் என்னிடம் இதற்கு உரிமை வாங்கவில்லை என்று கூறியிருந்தார் .

இதனால் அனிருத் அந்த இசையை திருடிதான் லியோ படத்திற்கு போட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர் . இதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் இவர்தான் இளையராஜாவும் , ரகுமானும் கலந்த கலவையா என்று கலாய்த்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *