April 30, 2024

வளர்ச்சினா இப்படி இருக்கணும் ..!! உலக அரங்கில் சூரியின் திரைப்படம் ..!! ஒரு நடிகனுக்கு இதை விட என்ன வேண்டும் ..??

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று தரமான நடிகர் என்று பெயர் எடுத்திருக்கிறார் நடிகர் சூரி.  அந்த வகையில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் காமெடியாக அறிமுகமானார் . இந்த படத்தில் இவர் 50 புரோட்டா சாப்பிடும் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது . இதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில்,

காமெடி வேடங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சூரி . இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த சூரி கடந்த வருடம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம்,

கதாநாயகனாக அறிமுகமானார் . இப்படி இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமே இவருக்கு ஏகபோக வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இதைத்தொடர்ந்து தற்போது கூழாங்கல் என்ற தரமான படத்தை இயக்கிய இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ்,

இயக்கத்தில் உருவாகி வரும் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் சூரி.  இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இந்தத் திரைப்படம் பெர்லினில் நடந்த பிலிம் பெஸ்ட்வலில் பங்கு பெற்று நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சூரி.  இதை பார்த்த ரசிகர்கள் வளர்ச்சினா இப்படி இருக்கணும் என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *