April 28, 2024

நடிச்சா இனிமேல் ஹீரோ தான் ..!! சைக்கோ இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி ..!! வைரலாகும் படத்தின் பூஜை புகைப்படங்கள் ..!!

விஜய் சேதுபதி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுந்தர பாண்டியன் ,பீட்சா ,சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி . இப்படி ஹீரோவாக கலக்கி கொண்டு வந்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் வில்லனாகவும் தமிழ் ரசிகர்களை மிரட்டினார் . இப்படி இருக்கும் நிலையில் இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என்று ,

அதிரடி முடிவு எடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.  இதை அடுத்து தற்போது இயக்குனர் மிஷ்கின்  இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளாராம்  நடிகர் விஜய் சேதுபதி . ட்ரெயின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை ,

இன்று சிம்பிளாக நடைபெற்று உள்ளது.  அந்த பூஜையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ,  இயக்குனர் வெற்றிமாறன் போன்றவர்கள் கலந்து கொண்டனர் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *