May 3, 2024

சூரி என்னாமா ரொமான்ஸ் பண்றாரு பாருங்க ..!! இத்தன நாளா இதை எங்கப்பா ஒளிச்சு வச்சிருந்த ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான காமெடி நடிகராக இருந்து வந்தவர் சூரி . வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான சூரி குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி நடிகராக மாறினார் . இப்படி காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த சூரி கடந்த வருடம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான,

விடுதலை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . அதுவரை காமெடியனாக பார்த்த சூரியை இந்த படத்தில் ஒரு தரமான நடிகராக மாற்றி இருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.  இதனால் சூரி மீது இருந்த காமெடியன் என்ற பிம்பம் இந்த படத்தால் உடைந்தது.

இதன் பிறகு தொடர்ச்சியாக ஹீரோவாகத்தான் நடித்துக்கொண்டு வருகிறார் சூரி . அந்த வகையில் தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கருடன் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் சூரி . இந்த படத்தில் இவரோடு இணைந்து சசிகுமார் ,

உன்னி முகுந்தன் ,சமுத்திரகனி ,ரேவதி பிரியா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்த படத்தில் தனக்கு ரொமான்ஸும் சூப்பராக வரும் என்று நிரூபித்திருக்கிறார் சூரி . இதைப்பார்த்த ரசிகர்கள் இத்தன நாளா இதை எங்கப்பா ஒளிச்சு வச்சிருந்த என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *