May 3, 2024

ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா ..!! வாடிவாசல் படத்தில் நடிக்கப்போவது இந்த நடிகரா ..?? தீயாய் பரவும் தகவல் உள்ளே ..!!

பொதுவாகவே வெற்றிமாறன் படங்கள் என்றாலே ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும்.  அப்படி சில வருடங்களுக்கு முன்பே சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை தொடங்கினார் வெற்றிமாறன்.  இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்க இருந்தார் . இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் கூட நடைபெற்றது.  ஆனால் பல வருடங்கள் ஆகியும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

அதோடு இந்த படத்தில் இயக்குனர் அமீருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம் . ஏற்கனவே அமீருக்கும் , சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இதனால் சூர்யா வெளியேறுவதாக தகவல் வெளியானது .இதன் பிறகு வாடிவாசல்,

படத்தில் நடிக்கலாம் என்று இருந்தாராம் சூர்யா.  ஆனால் அதற்குள் இயக்குனர் வெற்றிமாறன் விஜயின் கடைசி படத்தை இயக்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம் . இதனால் ஒரு சில வருடங்கள் ஆகிவிடும் என்பதாலும் , கால்ஷீட் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் சூர்யா ,

இந்த படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.  இதனால் சூர்யாவுக்கு வாடிவாசல் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *