May 3, 2024

என்றும் இளமை மாறாத சூப்பர் ஸ்டார்..!! மாஸ் காட்டும் வேட்டையன் படத்தின் புகைப்படங்கள் ..!!

தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அமிதாப்பச்சன் ,பகத் பாசில், ராணா ரகுபதி ,மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ,துஷாரா விஜயன், கிஷோர் ,ரோகினி, ரக்சன் போன்ற ,

பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். உண்மை கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை  லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . அதோடு  இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம்.  மேலும் கடந்த வருடமே தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு,

தீவிரமாக நடைபெற்று வருகிறது . மேலும் இந்தத் திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகலாம் என்றும் இல்லையென்றால் சுதந்திர தினத்தில் வெளியாகலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் வேட்டையன் படத்தின் ,

புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது .இதை பார்த்த ரசிகர்கள் என்றும் இளமை மாறாத சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *