April 27, 2024

புள்ளக்குட்டின்னு செட்டிலான ” ஆட்டோகிராப் ” கோபிகாவின் குடும்ப புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆட்டோகிராப்.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கோபிகா . இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் நடிகை கோபிகா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கனா கண்டேன் ,

பொன்னியின் செல்வன் ,தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு , வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை கோபிகா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் மலையாளம் மொழி படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார் நடிகை கோபிகா . இப்படி தொடர்ந்து நடித்து வந்த கோபிகா கடந்த 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் .

குறிப்பாக திருமணமான பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட  நடிகை  கோபிகா தற்போது வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டாராம் . இப்படி இருக்கும் நிலையில் ஆட்டோகிராப் கோபிகாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *