April 29, 2024

லட்டு போல வந்த எந்திரன் பட வாய்ப்பு ..!! அல்வா போல நழுவ விட்ட டாப் நடிகர் ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எந்திரன் . கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் ,சந்தானம் ,கருணாஸ், கலாபவன் மணி, டெல்லி குமார் ,தேவதர்ஷினி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.  அதுவும் தமிழ் சினிமாவின் முதல் ரோபோட் திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு ஏகபோக வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும் .

குறிப்பாக இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.  ஆனால் இந்த புகழை அடைந்திருக்க வேண்டியவர் சூப்பர் ஸ்டார் இல்லையாம் உலகநாயகன் கமல்ஹாசன் தானாம்.  அந்த வகையில் எந்திரன் படம் ,

தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசனை வைத்து ரோபோ என்ற படத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் . கிட்டத்தட்ட இந்த படத்திற்கான போட்டோ ஷூட்கள் எல்லாம் முடிந்து இருக்கிறது . ஆனால் பாதியிலேயே இந்த படம் கைவிடப்பட்டதாம் .

இதன் பிறகு தான் சூப்பர் ஸ்டாரை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *