April 26, 2024

கர்ணன் பட நடிகைக்கு டும் டும் டும் ..!! மாப்பிள்ளை இந்த பிரபலமா ..?? சரியான ஆள தான் புடிச்சிருக்காரு ..!!

ரஜிஷா விஜயன் ஓர் பிரபலமான மலையாள திரைப்பட நடிகை ஆவார்  . ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து வந்த ரஜிஷா விஜயன் கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் .

பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ரஜிஷா விஜயன் . இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் ,கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை ரஜிஷா விஜயன்.  மேலும் இவர் தொடர்ச்சியாக மலையாளம், தமிழ் ,தெலுங்கு போன்ற படங்களில்,

நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் 32 வயதாகும் ரஜிஷா விஜயன் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் தான் . இவர்கள் இருவரும் ,

ஒரு படத்தில் ஒன்றாக பணிபுரியும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.  தற்போது இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *