May 12, 2024

ஏழுமலையா ..! ஜிகர்தண்டா 2 சூப்பர் ஹிட் ஆகணும் ..!! படக்குழுவினர்களுடன் திருப்பதி சென்ற ராகவா லாரன்ஸ் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது . அதில் ஒரு திரைப்படம் நடிகர் ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா  2 திரைப்படம் . அந்த வகையில் பீட்சா ,ஜிகர்தண்டா ,இறைவி, பேட்ட  போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் .

இந்த திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும் . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சைன் டாம் சாக்கோ , நிமிஷா சஜயன், நவீன் சந்திரா , சத்யன், அரவிந்த் ஆகாஷ் ,இளவரசு ,பாவா செல்லத்துரை,

போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது . குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

இப்படி இருக்கும் நிலையில் ஜிகர்தண்டா 2 படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக படக்குழுவினர்களுடன் திருப்பதி சென்று இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *