April 25, 2024

அப்படியே பாட்டி மஞ்சுளா போலவே மாறிய “பிக்பாஸ்” ஜோவிகா ..!! புகைப்படங்களை பார்த்து ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

மறைந்த நடிகை மஞ்சுளா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகையாக இருந்தவர் . எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே நடித்துக் கொண்டு வரும் மஞ்சுளா பின்னர் அடுத்த கால கட்ட நடிகர்களான ரஜினி , கமலுடனும் நடித்திருந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார் மஞ்சுளா . திருமணமான இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

அதில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார் . இவர் தமிழில் வெளியான சந்திரலேகா , மாணிக்கம் , நான் ராஜாவாக போகிறேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் .

இவரைத் தொடர்ந்து இவருடைய மகளும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார்.  ஆனால் வனிதா 8 அடி பாய்ந்தான் ஜோவிகா 16 அடி பாய்ந்திருந்தார் . அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கினார்  ஜோவிகா .

இப்படி இருக்கும் நிலையில் அம்மா மீது அளவற்ற பாசம் கொண்ட வனிதா தன்னுடைய மகளுக்கு அம்மாவைப் போலவே மேக்கப் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *