April 26, 2024

14 வருஷமா இருக்கும் சீமானும்..!! நேத்து வந்த விஜய்யும் ஒண்ணா ..?? முட்டா பசங்களா ..!! வறுத்தெடுத்த பிரபல இயக்குனர் ..!!

நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை சொல்லியதிலிருந்தே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர் . மேலும் விஜய்க்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளாராம் விஜய் . இதனால் ரசிகர்கள் விஜய்யை வைத்து கருத்து கணிப்பு போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமானையும் , விஜய்யையும் வைத்து யார் அடுத்த முதல்வர் என்று இணையத்தில் ஒரு கருத்துக் கணிப்பு எழுந்துள்ளது . இதை பார்த்த பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை,

இயக்குனர் களஞ்சியம் தான்.  தமிழில் வெளியான பூமணி ,கிழக்கும் மேற்கும், மிட்டா மிராசு போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர்  களஞ்சியம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்,

அடுத்த முதல்வர் யார் .? உங்கள் ஓட்டு யாருக்கு என்று சீமானின் புகைப்படத்தையும் , விஜய்யின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர் . இதை பார்த்த களஞ்சியம் ஏண்டா முட்டாள்களா ,நேத்து கட்சி ஆரம்பிச்சவனும் ,14 வருஷமா தொண்டை தண்ணி வத்த கத்தறவனும் ஒண்ணாடா .?

இன்னும் கொடி என்ன .? கொள்கை என்ன.? எதையும் சொல்லல , அதுக்குள்ள அடுத்த முதல்வரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் . தற்போது அவருடைய பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *