April 29, 2024

அஜித்குமார் எனும் நான் ..!! விஜய்யை தொடர்ந்து அரசியல் அவதாரம் எடுத்த அஜித் ..!! தீயாய் பரவும் ஏ ஐ புகைப்படங்கள் ..!!

அஜித் குமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார்.  அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜித் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற லிஸ்ட்டில் இணைந்தார் .  குறிப்பாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித் மட்டும் தான் .

மேலும் சமீபத்தில்  இவருடைய நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதைத்தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் அஜித்.  மேலும் சினிமாவில் இருக்கும்,

எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஆசைப்படுகின்றனர். ஆனால் நடிகர் அஜித் மட்டும் எப்போதும் அரசியலை விட்டு விலகியே இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சமீப காலமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார் அஜித்.

இப்படி இருக்கும் அஜித் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார் என்று ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.  அந்தப் புகைப்படங்கள் தற்போது  இணையத்தையே கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *