May 5, 2024

கார் த்தி யை தொட ர்ந்து சூர்யா வுக் கும் ஜோடி யாகு ம் 26 வ யது நடி கை ..!! வே ண்ட வே வேண் டா ம் என் று கத றும் சூ ர்யா ரசிக ர்க ள் ..!! எ ந்த நடி கை தெ ரியு மா ..??

தற்போது  தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி . மூத்த நடிகரான சிவகுமாரின் வாரிசுகளான சூர்யா மற்றும் கார்த்தி தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களாக கலக்கிக் கொண்டு வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் கார்த்தியுடன் நடித்திருந்த ஒரு நடிகை சூர்யாவுடன் இணைய உள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை அதிதி ஷங்கர்  தான் . இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான,

நடிகை அதிதி ஷங்கர் கடந்த வருடம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் நடித்திருந்தார் நடிகை அதிதி ஷங்கர் . அது மட்டுமல்லாமல் தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறாராம்  ஆனால் சமீப காலமாக காமெடி என்ற பெயரில் மொக்கை போட்டு பெயரை கெடுத்துக்கொண்டு வருகிறார் அதிதி ஷங்கர் .

இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவுடன் இணைய உள்ளாராம்  நடிகை அதிதி ஷங்கர் . அந்த வகையில் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதைப் பார்த்த  நடிகர் சூர்யா ரசிகர்கள் அவர் மட்டும் வேண்டவே  வேண்டாம் என்று கதறி வருகின்றனர். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *