April 29, 2024

84 வயதாகும் கவுண்டமணிக்கு ..!! 27 வயது நடிகை ஜோடியா ..?? வெளியானது கவுண்டமணி படத்தின் அறிவிப்பு ..!! எந்த நடிகை தெரியுமா ..??

80 , 90  களில் தமிழ் சினிமா உலகில்  தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் நடிகர் கவுண்டமணி.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தில் கலக்கி கொண்டு வந்தார்.  இன்னும் சொல்லப்போனால் கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க,

சிரிக்க வைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி நம்மையெல்லாம் சிரிக்க வைத்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் . பின்னர் பல வருடங்கள் கழித்து 49 ஓ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்த கவுண்டமணி,

பின்னர் ஒரு சில படங்களில் நடித்து மீண்டும் சினிமாவை விட்டு விலகி விட்டார்.  இப்படி இருக்கும் நிலையில் 7 வருடங்கள் கழித்து தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் கவுண்டமணி.  அப்படி 84 வயதாகும் கவுண்டமணிக்கு இந்த படத்தில் ,

27 வயது நடிகை ஒருவர் ஜோடியாக நடித்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாரும் இல்லை சீரியல் நடிகையான் ஹிமா பிந்து தான் . கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் பிரபலமான ஹிமா பிந்து  தற்போது சன் தொலைக்காட்சியில்,

ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார்.  இப்படியொரு  நிலையில் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளாராம் நடிகை ஹிமா பிந்து . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *