April 26, 2024

சற்றுமுன் 92 வயது மூத்த நடிகர் மரணம் ..!! சோகத்தில் வாடும் நடிகரின் குடும்பம் ..!! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த தமிழ் பிரபலங்கள் ..!!

ரா சங்கரன் ஓர் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார்.  இயக்குனராக தேன் சிந்துதே வானம் ,தூண்டில் மீன் , வேலும் மயிலும் துணை போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் ரா சங்கரன் . இதன் பிறகு இயக்குவதை நிறுத்திய ரா சங்கரன் பின்னர் முழு நேர நடிகராக மாறினார் . அப்படி தமிழில் வெளியான புதுமைப்பெண் ,ஒரு கைதியின் டைரி , மௌன ராகம், பொண்டாட்டி தேவை,

சின்ன கவுண்டர் ,அமராவதி ,சதிலீலாவதி, அரண்மனை காவலன் , ஜமீன் கோட்டை , காதல் கோட்டை, அழகர்சாமி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ரா சங்கரன் . பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகரும் இயக்குனருமான ரா சங்கரன்.

இப்படி இருக்கும் நிலையில் 92 வயதான ரா சங்கரன் இன்று வயது மூப்பு காரணமாக இறந்து விட்டாராம் . இவருடைய திடீர் மறைவிற்கு பிரபலங்களும் , ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *