May 3, 2024

சத்தமே இல்லாமல் சம்பாரிப்பது எப்படின்னு ..!! சூர்யாவை பார்த்து தான் கத்துக்கணும் ..!! இவரோட சொத்து மதிப்பு இத்தனை கோடியா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூர்யா . சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா ஆரம்ப காலகட்டங்களில் பல விமர்சனங்களுக்கு ஆளானார் . இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி இன்று இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து வருகிறார் நடிகர் சூர்யா.  மேலும் சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் சூர்யா .

இதை அடுத்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் சூர்யா . இந்த படத்தை முடித்து கொண்டு இயக்குனர் சுதா கொங்காரா இயக்க உள்ள புறநானூறு என்ற படத்திலும் ,

இயக்குனர் வெற்றி மாறன் இயக்க உள்ள வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா . மேலும் தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் அடுத்தடுத்த பல படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் சூர்யா . குறிப்பாக நடிகர் சூர்யா நடிகர் மட்டுமல்லாமல் ,

தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரும் ஆவார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடி வரை வாங்கும் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு,

சுமார் 750 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது . மேலும் நடிகர் சூர்யாவின் வீட்டின் மதிப்பே  70 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *