May 3, 2024

விஜய்க்கு நான் ஓட்டு போட மாட்டேன் ..!! என்ன தகுதி இருக்கு ..?? பளிச்சென்று கேள்வி எழுப்பிய அரவிந்த்சாமி ..!!

அப்போதும் சரி, இப்போதும் சரி பல பெண்களின் கனவுக்கண்ணனாக இருந்து வருபவர் நடிகர் அரவிந்த்சாமி . தளபதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அரவிந்த்சாமி தொடர்ந்து ரோஜா, பம்பாய், என் சுவாசக் காற்றே, மின்சாரக் கனவு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் விஜய் தன்னுடைய கட்சியின் ,

பெயரை அறிவித்திருந்தார் . இதனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அரவிந்த்சாமி கூறியதாவது, நான் ரஜினி சாரோட மிகப்பெரிய ரசிகன்,

எனக்கு கமல் சாரையும் ரொம்ப பிடிக்கும் , விஜயையும்  பிடிக்கும் . இதற்காக நான் ஓட்டு போட மாட்டேன் , நீங்கள் சொல்கிற விஷயங்கள் இந்த சமுதாயத்தில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரப் போகிறதா என்பது எனக்கு முதலில் தெரிய வேண்டும் . மேலும் நீங்கள் அரசு சம்பந்தப்பட்ட,

விஷயங்களை எப்படி கையாள்வீர்கள் என்பது எனக்கு தெரியாது . அதனால் உங்களை நான் எப்படி நம்புவது . மேலும் இத்தனை நாட்களாக படத்தில் காட்டிய ஹீரோசியத்தை உண்மையிலேயே பொது வாழ்விலும் காட்டுவதற்கு கூட அரசியலில் இறங்கி இருக்கலாம் .

ஆனால் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு ஒரு தகுதி இருக்கிறது . மேலும் நான் நடிகர்களால் எதுவும் பண்ண முடியாது என்று சொல்ல வரவில்லை ,பண்ண முடியும், அதற்காக நீங்கள் முழுவீச்சாக இறங்க வேண்டும் என்று கூறியிருந்தார் நடிகர் அரவிந்த்சாமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *