April 26, 2024

இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கோ ..!! மீனாவுக்கு கோரிக்கை வைத்த கலா மாஸ்டர் ..!! இதற்கு மீனா என்ன சொன்னார் தெரியுமா ..?? ஆடிப்போன கலா மாஸ்டர் ..!!

90 ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா . நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய மீனா பின்னர் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக கலக்கிக் கொண்டு வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,  கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார் . இப்படி இருந்த நிலையில் கடந்த வருடம் உடல்நல குறைவால் திடீரென ,

இறந்து விட்டார் நடிகை மீனாவின் கணவர் . இந்நிலையில் மீனாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்கிறாராம் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை கலா மாஸ்டர் தான் . ஆரம்பத்திலிருந்தே  மீனாவுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்து வருபவர் ,

கலா மாஸ்டர்.  குறிப்பாக மீனாவின் கணவர் இறந்தபோது அவருக்கு முழு ஆறுதலாக இருந்தது கலா மாஸ்டர் தான் . இதையடுத்து மீனாவின் கணவர் இறந்த பிறகு,  உனக்கு ஒரு துணை வேண்டும்,  அதனால் இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று கூறி இருக்கிறார் கலா மாஸ்டர்.

இதைக் கேட்டதும் கடுப்பான மீனா கண்டபடி கலா மாஸ்டரை திட்டி விட்டாராம் . அதன் பிறகு அதை கேட்பதையே நிறுத்திவிட்டாராம் கலா மாஸ்டர் . இதை சமீபத்திய  பேட்டி ஒன்றில் கலா  மாஸ்டரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *