April 30, 2024

400 கோடி பட்ஜெட் ..!! என்னோட அடுத்த ஹீரோ இவர் தான் ..!! அதிரடியாக அறிவித்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஏ ஆர் முருகதாஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜயகாந்தை வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி ,ஏழாம் அறிவு ,விஜய்யை  வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை  வைத்து தர்பார் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் .

ஆனால் கடைசியாக இவருடைய இயக்கத்தில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் .

இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதை முடித்த கையோடு பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கான் உடன் இணைய உள்ளாராம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் .

இந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.  இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *