May 5, 2024

அத ற்கு மட் டும் 90 கோ டி செ லவா ..?? பிரம் மாண் டம் என் ற பெய ரில் அட்டூ ழிய ம் பண் ணும் ஷ ங் கர் ..!! ரத் த கண் ணீ ர் வடிக் கும் தயா ரிப்பாள ர் ..!!

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் ,இந்தியன் ,முதல்வன், ஜீன்ஸ், அந்நியன் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .

மேலும் இயக்குனர் ஷங்கரின் படங்கள் என்றால் கண்டிப்பாக பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது.  அந்த அளவிற்கு தயாரிப்பாளர்களின் காசை அள்ளி இறைப்பார் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் ஷங்கர் தெலுங்கு நடிகரான ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் ,

என்ற படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார் . இந்த படத்தில் ராம்சரனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா ,கியாரா அத்வானி, சமுத்திரகனி ,ஜெயராம் ,அஞ்சலி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்தப் படத்தை வாரிசு பட தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து வருகிறார் . கடந்த இரண்டு வருடங்களாக,

நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் அதற்காக மட்டும் 90 கோடி செலவு செய்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர் . அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே 90 கோடி செலவு செய்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர் .

அந்த அளவிற்கு ஒவ்வொரு பாடல் காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது . இதனால் போட்ட காசை எடுக்க முடியுமா என்று ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக இருக்கிறாராம் தயாரிப்பாளர் . இதைப் பார்த்த  ரசிகர்கள்  இயக்குனர் ஷங்கர்  இன்னும் மாறவே இல்ல போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *