May 2, 2024

ரசிகர்களே அடுத்த ” காக்கா- கழுகு ” கதை கேட்க தயாரா ..?? போன முறை விஜய் ..!! இந்தமுறை இந்த நடிகரா ..?? லால் சலாம் ஆடியோ லான்ச்சுக்கு தயராகும் சூப்பர் ஸ்டார் ..!!

தற்போது இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்கள் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.  அப்படி ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் காக்கா- கழுகு கதை சொல்லி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  குறிப்பாக இவர் விஜய்யை தான் காக்கா என்று குறிப்பிட்டு கூறியதாக அப்போது விஜய் ரசிகர்கள் கொந்தளித்தார்கள் .

அதுமட்டுமில்லாமல் லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ரத்னகுமார் சூப்பர் ஸ்டார் சொன்ன கதைக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் அடுத்த குட்டி கதை சொல்வதற்கு தயாராகி விட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விரைவில் நடைபெற இருக்கிறதாம்.  எப்படி ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் விஜய்யை வைத்து காக்கா- கழுகு கதை ,

சொன்னாரோ .? அதேபோல இந்த முறை தனுசுக்காக ஒரு கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம் ரஜினிகாந்த்.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *