April 27, 2024

அடு த்த சூப்ப ர் ஸ்டா ர் போ ய் , இப் ப அடுத்த விஜ ய் யா ரா ..?? மீண் டும் பஞ்சா யத் தை தொட ங்கி ய நடிக ர்க ள் ..!! யாரு ன் னு நீங் க ளே பா ருங் க ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் பெரிய பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருப்பது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான் . அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் விஜய் ,சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்கள் உள்ளனர் . ஆனால் இதற்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் பாடல் மூலம் சரியான பதிலடி கொடுத்திருந்த து அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் .

இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தே  இன்னும் ஓயவில்லை . அதற்குள் அடுத்த விஜய் யார் என்ற பஞ்சாயத்து தொடங்கியுள்ளது . அந்த வகையில் நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்குவதாக அறிவித்திருந்தார் . அதற்காக தற்போது தீயாக வேலை செய்து வருகிறார் .

இந்த காரணத்தால் சினிமாவில் மூன்று வருடங்களுக்கு நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகர் விஜய் . இதனால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு இந்த நடிகர்களால் தான் முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் அடுத்த விஜய் ஆவதற்கான பட்டியலில்,

கார்த்தி, தனுஷ் , சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் உள்ளனர் . இதில்  யாராவது ஒருவர் தான் அந்த இடத்தை பிடித்து வருவார்கள் என்று கூறப்படுகிறது.  காரணம் இவர்கள் மூன்று பேருமே படத்திற்கு படம் தனித்துவமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து,

வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் இவர்களின்  நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவில் நஷ்டமும் அடைவதில்லை . இதனால் இந்த மூன்று பேரில் யாராவது ஒருவர் விஜயின் இடத்தை பிடித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *