May 1, 2024

முறை மாமனை கரம்பிடிக்க போகும் ரோபோ சங்கரின் மகள் ..!! கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம் ..!! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணி அசத்திய ரோபோ சங்கர் பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . மேலும் திருமணமான ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்ற மகளும் இருக்கிறார்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ,

இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இந்த படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் இந்திரஜா சங்கர் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தார் நடிகை இந்திரஜா சங்கர் , அதோடு இவர் பாகல் என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் 20 வயதான இந்திரஜா சங்கர் ,

தன்னுடைய முறை மாமனான கார்த்திக் என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளாராம். மேலும் இவருக்கும் அவருடைய முறை மாமாவுக்கும் நேற்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை,

கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கரின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *