April 27, 2024

“சரி கம பா” நிகழ்ச்சியின் நடுவரான ஸ்ரீநிவாஸின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் உள்ளே ..!!

ஸ்ரீநிவாஸ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஆவார்.  கடந்த 1994 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார் ஸ்ரீநிவாஸ்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பம்பாய் ,மின்சார கனவு ,உயிரே, படையப்பா, காதலர் தினம், சங்கமம் ,ஜோடி ,முதல்வன் ,தாஜ்மஹால்,அலைபாயுதே , தெனாலி , சிநேகிதியே ,

கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்  போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமானார் பாடகர் ஸ்ரீநிவாஸ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், ஹிந்தி, மராத்தி என்று ,

இதுவரை 3000 பாடல்களுக்கு மேல் பாடி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை அடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரி கம பா  என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் பாடகர் ஸ்ரீநிவாஸ் . இதனிடையே திருமணமான,

பாடகர் ஸ்ரீநிவாஸ்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடாத சரி கம பா  நிகழ்ச்சியின் நடுவரான ஸ்ரீநிவாஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *