April 30, 2024

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம் ..!! இரண்டாம் திருமணத்துக்கு ரெடியான ஷங்கரின் மகள் ..!! மாப்பிள்ளை யாரு தெரியுமா ..??

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் இயக்குனர் ஷங்கர் அவர்கள் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷங்கர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த ஷங்கர் தொடர்ந்து காதலன், இந்தியன் ,ஜீன்ஸ், முதல்வன் ,அந்நியன் ,

சிவாஜி , எந்திரன் என்று பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இயக்குனர் ஷங்கருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  இதில் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு,

கிரிக்கெட் வீரரான ரோகித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது . ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகனான ரோகித் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கினார் . இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  இதனால் கணவரை பிரிந்து வாழ்ந்து,

வந்தார் ஷங்கரின் மகள் . இப்படி இருக்கும் நிலையில் ஷங்கரின் மகளுக்கு விரைவில் இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளதாம் . அந்த வகையில் தருண் கார்த்திக் என்பவருடன் ஷங்கரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாம். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *