April 30, 2024

ஜெயிலர் வெற்றி ..!! அடுத்த பட ஹீரோவை அறிமுகப்படுத்திய நெல்சன் ..!! அப்ப இந்த முறையும் குறி தப்பாது ..!! எந்த நடிகர் தெரியுமா ..??

நெல்சன் தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக மாறிவிட்டார்  என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில்  கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த நெல்சன் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் ,விஜய்யை  வைத்து பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.  இதை அடுத்து கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,

வெளியான ஜெயிலர் படத்தையும் இயக்கி இருந்தார் இயக்குனர் நெல்சன்.  இப்படி வெளியான திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது குறிப்பாக இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  இதனால் நெல்சனின் அடுத்த ஹீரோ யார் என்ற,

கேள்வி இப்போதே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  ஆனால் ஜெயிலர் வெற்றியால் சம்பளத்தை தாண்டி பல கோடிகளை அள்ளிய இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளாராம்.   அப்படி அவர் எடுக்க உள்ள முதல் படத்தின் ஹீரோ நடிகர் கவின் தானாம் .

ஏற்கனவே இயக்குனர் நெல்சனிடம் டாக்டர் , பீஸ்ட்  போன்ற படங்களில்  உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்  நடிகர்  கவின்.  அந்த நட்பின் காரணமாக கவினை வைத்து படம் தயாரிக்கப் போகிறாராம்  இயக்குனர் நெல்சன் . இந்த படத்தை நெல்சனின் நண்பரான சிவபாலன்,

இயக்க உள்ளாராம்.  இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க  உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *