April 25, 2024

ராதாவின் மகளுக்கு கல்யாணமான நேரம் ..!! வீட்டில் நடந்த அடுத்த விசேஷம் ..!! பெருமையாக சொல்லிய ராதா ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தவர்தான் நடிகை ராதா . இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் . இதில் மூத்த மகள் தான் நடிகை கார்த்திகா நாயர் . தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கார்த்திகா நாயர் கடந்த 2011 ஆம் ஆண்டு கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான,

கோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி இவர் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான அன்னக்கொடி ,புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தில்,

நடித்திருந்தார் நடிகை கார்த்திகா நாயர்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இதன்பிறகு பட வாய்ப்பு குறைந்ததும் சினிமாவை விட்டே விலகி விட்டார் கார்த்திகா நாயர் .

இந் நிலையில் கடந்த வருடம்  ரோகித் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கார்த்திகா நாயர்.  இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் கார்த்திகாவின் குடும்பத்தில் அடுத்த விசேஷம் நடைபெற்று உள்ளது .

அதாவது கார்த்திகாவின் கணவரின் தம்பிக்கு திருமணம் நடைபெற உள்ளதாம் . இதனால் மூத்த மருமகள் என்ற பதவியை பெற்றிருக்கிறார் கார்த்திகா.  இதை பெருமையாக தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ராதா .இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *