April 29, 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நேரம் ..!! பிரபல இயக்குனருடன் இணைந்த ஜோவிகா ..!! இனிமேல் இவரை கையிலேயே பிடிக்க முடியாது ..!!

பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறது . அப்படி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.  இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் ஏழாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது . எப்போதும் போல இந்த நிகழ்ச்சியிலும்,

மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . அப்படி இதில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதாவின் மகளான ஜோவிகாவும் போட்டியாளராக கலந்து கொண்டார்.  மேலும் அம்மா 8 அடி பாய்ந்தால்,  மகள் 16 அடி பாய்வார் என்று சொல்வது போல ,

பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்து வந்தார் ஜோவிகா . அது மட்டுமல்லாமல் இவர் வாழ்க்கைக்கு படிப்பு தேவையே இல்லை என்று சொன்னதெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  இப்படி பிக் பாஸ் வீட்டில் ஓவராக பேசி சக போட்டியாளர்களை  கடுப்பேற்றி வந்த,

ஜோவிகா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.  அப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நேரமோ என்னமோ பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார் ஜோவிகா . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் பார்த்திபன் தான்.  அந்த வகையில் தற்போது இயக்குனர் பார்த்திபனுடன்,

உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளாராம் ஜோவிகா .  இதனால் வரும் காலத்தில் இவர் நடிகையை தாண்டி இயக்குனராகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *