April 26, 2024

கைவிட்ட சினிமா ..!! புரோட்டா மாஸ்டரான ” சாட்டை ” பட நடிகர் ..!! 10 படம் நடிச்சும் காணாமல்போன சோகம் ..!!

சினிமா என்பது ஒரு மாயக்கடல் .  அதில் வருடா வருடம் லட்சக்கணக்கான பேர் குதித்து வருகின்றனர். ஆனால்  அதில் ஒரு சில பேர் மட்டும்தான் கரை சேர்கின்றனர் . அப்படி அந்த மாயக்கடலில் மூழ்கி காணாமல் போனவர்கள் ஏராளம் உண்டு. அதில் ஒருவர் தான் சாட்டை பட நடிகரான யுவன் . கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பாசக்கார நண்பர்கள் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார் யுவன்.

இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சாட்டை படத்தின் மூலம் தான் . இந்தப்படத்தில்  சமுத்திரக்கனி, தம்பி ராமையா ,மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் யுவனுக்கு ,

நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கீரிப்புள்ள ,காதலைத் தவிர வேறொன்றும் இல்லை, கமரக்கட்டு, இளமி ,அய்யனார் வீதி ,விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை போன்ற பல படங்களில் நடித்தும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை விட்டு விலகிய யுவன் தற்போது புரோட்டா மாஸ்டர் ஆக பணியாற்றி வருகிறாராம்.  அந்த வகையில் அவர் கூறியதாவது இயக்குனர் பாலா சார் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருந்தேன்.  அந்த படத்தின் அறிவிப்பு கூட வெளியானது .

ஆனால் அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது . எங்கே போனாலும் பாலா சார் படம் என்னாச்சு என்றுதான் கேட்பார்கள்.  குறிப்பாக அந்த படத்திற்காக தான் நான் பரோட்டா செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டேன் கடைசியில் அதுவே எனக்கு தொழிலாக மாறிவிட்டது என்று கூறியிருந்தார் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *