April 30, 2024

73 வயதாகியும் குறையாத கம்பீரம் ..!! மொய்தீன் பாயாக மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ..!! இணையத்தை கலக்கும் லால் சலாம் படத்தின் புகைப்படங்கள் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . தனுஷ் நடிப்பில் வெளியான 3  என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்  ஐஸ்வர்யா . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் ஐஸ்வர்யா . பின்னர் சில வருடங்கள் கழித்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார் . ஆனால் இந்த படம் ,

பெரியளவில் வரவேற்பை பெறவில்லை . இதன் பிறகு பல வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில்,

நடித்திருக்கிறார்.  அவரோடு இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த ,லிவிங்ஸ்டன்,செந்தில் ,ஜீவிதா, கேஸ் ரவிக்குமார், நிரோஷா, அனந்திகா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் .

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *