April 27, 2024

கமல் மகளுக்கு என்னாச்சு..?? அரக்கியாக மாறி ரசிகர்களை பயமுறுத்தும் ஸ்ருதிஹாசன் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கடந்த 2016 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 ,விஷால் நடிப்பில் வெளியான பூஜை ,விஜய் நடிப்பில் வெளியான புலி ,அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்படி முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் கூட இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை . இதனால் தற்போது தமிழ் மொழியை தாண்டி அதிகம் தெலுங்கு மொழி படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன் .

அதுமட்டுமல்லாமல் தற்போது தி ஐ என்ற ஆங்கில படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் அரக்கி போல மாறிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் .

இதைப் பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு என்னாச்சு.? என்று கூறி வருகின்றனர் . மேலும் இவர் மான்ஸ்டர் மிஷின் என்ற வீடியோவிற்காக தான்  இப்படி நடித்ததாக கூறப்படுகிறது .இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *