April 20, 2024

படிக்காதவன் பட சிறு வயது ரஜினியா இது ..?? இவரோட மனைவி , தங்கை இருவருமே நடிகைகளா ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1985 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படிக்காதவன் . இந்த படத்தில் இளம் வயது சூப்பர் ஸ்டாராக நடித்து அசத்தியிருந்தவர் தான் நடிகர் சூர்யா கிரண். அப்படியே சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் ,நடை உடை பாவனை என்று அந்த சிறு வயதிலேயே அசத்தி இருந்தார் நடிகர் சூர்யா கிரண் .  இவர் இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

நடிப்பில் வெளியான மனிதன் ,வேலைக்காரன் போன்ற படத்திலும் சிறு வயது ரஜினி ஆக நடித்து அசத்தியிருந்தார்.  இப்படி குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த சூர்யா கிரண் சத்யம் ,பிரம்மாஸ்திரம் ,ராஜு பாய் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார்.

இதனிடையே காசி , பெண்ணின் மனதை தொட்டு , புன்னகை பூவே , சமுத்திரம் , குட்டி பிசாசு  போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்த  நடிகை கல்யாணியை திருமணம் செய்து கொண்டார் சூர்யா கிரண் . ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று,

பிரிந்து விட்டனர் . அது மட்டுமல்லாமல் நடிகர் சூர்யா கிரணின் தங்கைதான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கலக்கி கொண்டு வரும் நடிகை சுஜிதா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை சூர்யா கிரணின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *