April 29, 2024

அடுத்த ஹீரோயின் ரெடி ..!! ராகவா லாரன்ஸின் ஒரே மகளா இது ..?? ஹீரோயின் கணக்கா வளர்ந்து விட்டாரே ..?? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ராகவா லாரன்ஸுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உள்ளது . அப்படி ஆரம்பத்தில் குரூப் டான்ஸ் ராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ் பின்னர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதன் பிறகு வெளியான அற்புதம் என்ற படத்தின் மூலம்  கதாநாயகன் அவதாரம் எடுத்த ராகவா லாரன்ஸ் முனி படத்தின் மூலம் ,

இயக்குனராகவும் அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் ராகவா லாரன்ஸ். தற்போது இவர் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,  அதிகாரம் , துர்கா என்று பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகர்  ராகவா லாரன்ஸ். குறிப்பாக இவருடைய தனித்துவமான நடனத்திற்கு தான் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  அது மட்டுமல்லாமல் இவர் ஏழை,

எளிய குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் . இதனிடையே லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ராகவா லாரன்ஸுக்கு ராகவி என்ற ஒரு மகள் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ராகவா லாரன்ஸின் ஒரே மகளா இது ..?? ஹீரோயின் கணக்கா வளர்ந்து விட்டாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *