April 29, 2024

அப்பாவுக்கே தெரியாமல் ரகசிய திருமணமா ..?? மறைக்காமல் சொல்லிய ஸ்ருதிஹாசன்..!! வைரலாகும் அவர் போட்ட பதிவு ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் வருவது தான் நடிகை ஸ்ருதிஹாசன் . உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.  பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 3 ,பூஜை,புலி ,வேதாளம் ,சிங்கம் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் . ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் சுத்தமாக குறைந்தது.

இதனால் அதிகம் தெலுங்கு சினிமாவுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.  அப்படி அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்திலும் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் 37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத,

ஸ்ருதிஹாசனுக்கு சாந்தனு என்ற காதலர் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இப்படி இருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கும் சாந்தனுவுக்கும் ரகசியமாக திருமணம் நடந்து விட்டது என்று பாலிவுட் பிரபலம் ஒருவர் கூறியிருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து,

பேசிய ஸ்ருதிஹாசன் கூறியதாவது,  எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை , எல்லாத்தையும் வெளிப்படையாக சொல்லும் நான் இதை மட்டும் ஏன் மறைக்கப் போகிறேன் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.  இதோ அவர் வெளியிட்ட பதிவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *