April 22, 2024

சங்கி என்பது கெட்ட வார்த்தையே கிடையாது..!! மகளால் கிளம்பிய சர்ச்சை ..!! விளக்கம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ..!!

சமீபத்தில் நடந்த லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின்போது என்னுடைய அப்பா சங்கி கிடையாது , அவரை சங்கி என்று சொன்னால் எனக்கு கோபம் வரும் . அவர் சங்கியாக இருந்தால் கண்டிப்பாக லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று பேசி இருந்தார் ஐஸ்வர்யா.  ஆனால் ரஜினி சங்கி என்று ரசிகர்களும்,  பத்திரிகையாளர்களும் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் கருத்துக்கு எதிராக கூறிய வருகின்றனர் .

இன்னும் சொல்ல போனால் ப்ளூ சட்டை மாறன் ரஜினி ஒரு சங்கி என்பதை நிரூபிப்பதற்காக ஒரு லிஸ்டையே அனுப்பி இருந்தார் . இந் நிலையில் வேட்டையன் படப்பிடிப்பிற்காக விமான நிலையம் வந்த ரஜினியிடம் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதிலளித்த ரஜினி,

சங்கி என்பது கெட்ட வார்த்தை கிடையாது . ஐஸ்வர்யா அப்படி நினைத்து அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை . என்னுடைய அப்பா ஒரு ஆன்மீகவாதி , எல்லா மதங்களையும் விரும்பக் கூடியவர் என்று மட்டும் தான் அவர் கூறியிருந்தார் என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் சூப்பர் ஸ்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *