April 24, 2024

“வானத்தை போல” சீரியல் நடிகர் ஸ்ரீ குமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

ஸ்ரீ குமார் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகர் மற்றும் சினிமா நடிகர் ஆவார் . மூத்த இசையமைப்பாளரான ஷங்கர் – கணேசின் மகனான ஸ்ரீகுமார் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சின்னா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பம்பர கண்ணாலே ,சரோஜா , தெறி , ரங்கூன் , ஆர் கே நகர் ,  விக்ரம் ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஸ்ரீகுமார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது தமிழ் சீரியல்களின்  மூலம் தான் . அந்த வகையில் தமிழில் ஒளிப்பரப்பான ஆனந்தம் ,சிவசக்தி ,இதயம் ,கனா காணும் காலங்கள்,

பிள்ளை நிலா ,யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா , ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில்  நடித்திருந்த நடிகர் ஸ்ரீகுமார் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப்போல என்ற சீரியலில் நடித்து வருகிறார் .

இதனிடையே பிரபல தமிழ் நடிகையான ஷமிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ குமாருக்கு ஒரு மகளும் இருக்கிறார் . இந்நிலையில் நடிகர் ஸ்ரீ குமாரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *