April 30, 2024

ஜெய் ஸ்ரீ ராம்..!! சூப்பர் ஸ்டார் முதல் தனுஷ் வரை ..!! அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த இந்திய பிரபலங்கள் ..!!

இன்று அயோத்தி ராமர் கோவிலில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது . மேலும் பல வருடங்களாக அயோத்தி ராமர் கோவில் பஞ்சாயத்து நடைபெற்று வந்தது.  பின்னர் ஒரு வழியாக அதெல்லாம் தீர்ந்ததும் பிரம்மாண்டமாக ராமர் கோவிலை கட்டியுள்ளனர் . குறிப்பாக இந்து மக்களுக்கு இந்த கோவில் ஒரு அடையாளமாக  மாறப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும் .

மேலும் இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு இந்திய சினிமாவை சேர்ந்த குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுத்துள்ளனர் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடைய மருமகளான தனுஷ் ,சந்திரமுகி படத்தில் நடித்திருந்த,

நடிகை கங்கன ரணாவத் , அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், காந்தாரா படத்தின் கதாநாயகனான ரிஷப் செட்டி, சிரஞ்சீவி, ராம்சரண் , பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட் ,ரன்வீர் கபூர் , கத்ரீனா கைப் , பாடகர் ஹரிகரன் ,முகேஷ் அம்பானி குடும்பம் என்று பல பேர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் போட்டு ராமரை மகிழ்வித்துள்ளனர் . தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *