April 29, 2024

இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் ..!! ஆனால் , சூப்பர் ஸ்டாரின் முதல் சம்பளம் இவ்வளவு தானா ..?? அப்ப இருந்த நிம்மதி கூட இப்ப இல்லையாம் ..!!

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான்.  இவர் வருவதற்கு முன்பு வரை கலராக இருக்கும் நடிகர்கள் மட்டுமே ஹீரோவாக நடிக்க முடியும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்து வந்தது . ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அப்படி ஆரம்பத்தில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து வந்த சிவாஜி ராவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக ,

மாற்றினார் இயக்குனர் கே பாலச்சந்தர் . குறிப்பாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகர் என்ற அந்தஸ்த்தில்  இருந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் 73 வயதாகியும் கூட,

பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் ரஜினிகாந்த் . இதைஅடுத்து தற்போது ஒரு படத்திற்கு 100 அல்லது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய வருகிறார் ரஜினிகாந்த் . இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் அவர் முதல் முதலாக வாங்கிய சம்பளம்,

குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  அந்த வகையில் இவர் பஸ் கண்டக்டராக வேலை செய்வதற்கு முன்பு கன்னட பத்திரிக்கையில் பிழை திருத்தம் பார்க்கும் வேலை செய்து வந்தாராம். அப்போது அவருக்கு தினமும் இரண்டு ரூபாய் சம்பளமாம் . அப்படி பார்த்தால் மாதத்திற்கு,

60 ரூபாய்.  ஆனால் அந்த சம்பளத்தை வைத்து நண்பர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பது, படம் பார்ப்பது என்று ஜாலியாக செலவு செய்வாராம் ரஜினி.  ஆனால் அன்று இருந்த நிம்மதி இப்போது இல்லை என்று ஒரு பேட்டி ஒன்றில் ரஜினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *